இந்தியா, மார்ச் 27 -- திரைப் பிரபலங்களின் வீட்டில் நடக்கும் துக்க நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டாம் என தயாரிப்பாளர் சங்க செயல் தலைவர் தியாகராஜன் அனைத்து ஊடகங்ககுக்கும் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், " மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று. அது இயற்கையின் தீர்மானத்திற்குட்பட்டது என்பதை இவ்வுலகில் பிறந்த எல்லா உயிர்களும் அறியும். ஆறறிவு கொண்ட மனிதன் இன்னும் சற்றே அதிகமாகவே அதை உணர்ந்தவன்.

மேலும் படிக்க| மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம்.. கனத்த இதயத்துடன் இறுதி சடங்கு செய்த மகள்கள்..

மரண வீடுகள் மௌனிக்கப்படவும்... துயரத்தைப் பகிர்ந்துகொள்ளவும், துயர்கொள்ளவும் வேண்டியவை. யாரோ இறந்துபோனார்... எனக்கும் அவருக்கும் என்ன? ஒருவரின் அழுகையோ, துயரத்தை வெளிப்படுத்து...