இந்தியா, பிப்ரவரி 26 -- தித்திப்பான சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இதில் அல்வாவும் செய்யலாம் என்றால் ஆஹா அது எப்படி என்ற கேள்வி எழுகிறதல்லவா. வாங்க சர்க்கரை வள்ளிக் கிழங்கு அல்வாவை எப்படி செய்வது என பார்ப்போம்.

வேகவைத்த சக்கரவள்ளி கிழங்கு - 1/2 கிலோ

கொதித்து ஆறிய பால் - 1 கப்

முந்திரி பருப்பு

பாதாம்

திராட்சை

குங்கும பூ

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

சர்க்கரை - 1/4 கப்

நெய்

சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, துருவி வைக்கவும். கடாயில் நெய் ஊற்றி, முந்திரி, பாதாம், திராட்சை ஆகியவற்றை வறுத்து எடுத்து வைக்கவும். கடாயில், நெய் ஊற்றி, துருவிய சர்க்கரை வள்ளிக் கிழங்கை போட்டு கிளறவும்.

3 நிமிடம் கழித்து, இதில் காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றவும். இதை 10 நிமிடம், ஈரம் போகும் வரை கிளறவும். அடுத...