இந்தியா, மே 11 -- தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றியவர் பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரது இறுதிச் சடங்குகள் அனைத்தும் சொந்த ஊரான தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் இன்று நடக்கிறது என வைரமுத்து அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை அறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் வைரமுத்துக்கு ஆறுதல் மற்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் வைரமுத்துவுக்கு அன்பையும் தமிழையும் ஊட்டி வளர்த்த அன்னை எனவும் பெருமிதம் செய்துள்ளார்.

வைரமுத்து, தமிழ் சினிமாவில் காதல், காமம், உத்வேகம், சோகம், மகிழ்ச்சி, தத்துவம் என ஏகப்பட்ட ஜானர்களில் பாடல்களை அள்ளிக் கொடுத்து மக்களை தன் வசம் ஈர்த்தவர்.

அத்துடன், தமிழ் இலக்கியத்திற்கு தன் ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். அவர் தமிழ் மொழிக்கு செய்த பெர...