இந்தியா, பிப்ரவரி 25 -- தமிழக பட்ஜெட் வரும் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன்படி, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாடு மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. வரும் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது...