இந்தியா, மே 19 -- தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் காட்சிகள் மற்றும் முதல் பாடல் ஒரு நேர்மறையான கருத்தை மக்களிடம் உருவாக்கியது. அதனால் இந்த படத்தின் ஓடிடி உரிமைக்கு பெரும் போட்டி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க| 'உங்க எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் நான் பொறுப்பல்ல.. நான் என்னோட பெஸ்ட்ட தரேன்' வாடிவாசல் எதிர்பார்ப்புக்கு வெற்றிமாறன் பதில்

திரையரங்குகளில் வெளியிடத் தயாராகி வரும் முக்கிய படங்களில் 'குபேரரா' ஒன்றாகும். இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் மல்டி ஸ்டாரர் பான் இந்தியா படம் இது. இந்தப் படத்தில...