இந்தியா, மார்ச் 27 -- தங்கக் கடத்தல் வழக்கு: சட்டவிரோதமாக தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 64வது சிசிஎச் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கர்நாடகத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவின் ஜாமீன் தள்ளுபடி

விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று வருவாய் உளவுத்துறை இயக்குநரகம் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. பின் அனைத்து வாதங்களை கேட்ட நீதிமன்றம் ரன்யா ராவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

மூத்த ஐபிஎஸ் அதிகாரியின் மகளான ரன்யா, மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கத்துடன் பிடிபட்டார். இதையடுத்து, கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் கடத்தியதாக...