இந்தியா, ஏப்ரல் 14 -- இந்திய அளவில் பிரபலமாகிய நடிகை சமந்தா தனது தயாரிப்பு நிறுவனமான த்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் (Tralala Moving Pictures) தயாரிப்பு நிறுவனம் மூலம் அனைவருக்கும் சமமான சம்பளம் கிடைக்க உறுதி செய்வதை விரும்புகிறார். இதுதொடர்பாக ஃபுட் பார்மர்க்கு (Foodpharmer) அளித்த ஒரு பேட்டியில், ஆண்களுக்கு சமமான வேலையை நான் செய்த போதும் அவர்களை விட தனக்கு 'மிகவும் குறைவான' சம்பளம் வழங்கப்பட்ட படங்களில் அவர் பங்கேற்றது பற்றி பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க| பில்டப் காட்டும் கணவர்.. பீதியாக்கும் மனாவி.. வெளியான சமந்தா தயாரித்த படத்தின் டீசர்..

பேட்டியின் போது, சம்பள பாகுபாடு பிரச்சினை பற்றி பேசிய சமந்தா, "நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஆண்களுக்கு நிகராக சமமான நாட்கள் வேலை செய்து, சமமான வேலைகளைச் ...