இந்தியா, ஜூன் 1 -- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் கூலி திரைப்படம் மீதான ஆர்வம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ள நிலையில், நேற்று ரசிகர்கள் எதிர்பாராத நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் கூலி படத்திலிருந்து ஒரு மாஸ் பாடலை திடீரென பாடி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தற்போது இணையம் முழுவதும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க| 'இது போதும் எனக்கு இது போதுமே..' மகனின் வளர்ச்சியால் பெருமிதத்தில் இருக்கும் தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி!

தமிழில் ஆக்‌ஷன் படங்களை கொடுத்து வெற்றி பெற்று வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்குவதால் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தப் படத்தில் ஆமிர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் என பல மொழி திரைக் கலைஞர்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக...