இந்தியா, ஏப்ரல் 21 -- ஆட்டோ இம்யூன் கோளாறுடன் போராடிய நடிகை சமந்தா, நோய்வாய்ப்பட்ட பெண்களை விட்டுச் செல்லும் ஆண்கள் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவை லைக் செய்துள்ளார். இந்த பதிவில் அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் அதனை ஷேர் செய்யவும் இல்லை. இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகள் சமந்தா, நாக சைதன்யாவைத் தான் மனதில் வைத்து இந்த போஸ்ட்டை லைக் செய்துள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர். அது என்ன போஸ்ட் என்பதை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க| மீண்டும் ஒன்றாக அடிபடும் சமந்தா- சைதன்யா பெயர்! பஞ்சாயத்து முடியாது போலயே?

சக்ஸஸ்வெர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம், டையரி ஆஃப் ஏ சிஇஓ என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவின் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளது. 'நோய்வாய்ப்பட்ட துணையை விட்டுச் செல்லும் ஆண்கள்: உறவை கைவிடுவதற்கான உண்மை' என்ற தலைப...