இந்தியா, ஏப்ரல் 7 -- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையன் தனிநபராக சட்டபேரவையில் பேசியது அரசியல் விவாதங்களை கிளப்பி உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு இன்று தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் நகர்புற துறை மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறி இருந்த நிலையில் "அந்த தியாகி யார்?" என்ற பேட்ஜ்களை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
கேள்வி நேரம் உள்ளிட்ட விவாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் பிரச்னை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கைக்கு ஆதரவாக அதிமுக எம்....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.