இந்தியா, மார்ச் 23 -- சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) இன்று செய்தியாளர்களைச் சந்தித்து, பேசினார். திமுக அரசின் நான்காண்டு ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, டாஸ்மாக் ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவர் பேசினார்.

"தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி 100% உயர்வு, கடைகளுக்கு 150% உயர்வு, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கைட்லைன் மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்காண்டு ஆட்சியில் மக்களுக்கு பெரும் பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றி உள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுகவை விமர்சித்த...