இந்தியா, மார்ச் 23 -- கங்கனா ரணாவத் 1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் பிறந்தவர். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான கேங்ஸ்டர் எனும் பாலிவுட் படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இவர், திரைத்துறைக்கு வந்த சில வருடங்களிலே ஃபேஷன், குயின், தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ், மணிகர்னிகா, தலைவி, போன்ற பெண்களை மையப்படுத்திய பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின், தலைவி, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்தார்.

இவரது நடிப்புத் திறமையை பாராட்டும் விதமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

அரசியல் மற்றும் சமூக கருத்துகளை வெளிப்படையாக பேசி வந்த இவர், 2004 ஆம் ஆண்டு இமாச்சல பிரதேசத்தில் உள்ள ம...