இந்தியா, மார்ச் 15 -- விமல் நடிப்பில் உருவாகியுள்ள பரமசிவன் பாத்திமா எனும் திரைப்படம் சமுதாயத்தில் உள்ள மதம் சார்ந்த நம்பிக்கைகள், மதக் கலவரங்களைப் பற்றி பேசியுள்ளதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விமல், சாயா தேவி, எம்.எஸ். பாஸ்கர், கூல் சுரேஷ் அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் பரமசிவன் பாத்திமா. இந்தப் படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்க, தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார். லக்ஷ்மி கிரியேஷன்ஸ் பேனரில், இயக்குநர் இசக்கி கார்வண்ணனே படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் பெயரும், இந்தப் படத்தின் டிரெயிலர் வீடியோவை வெளியிட்ட நபர்களாலாலுமே படத்திற்கான புரொமோஷன் கிடைத்துள்ளது. நேற்று மார்ச் 14 ஆம் ேசி இப்படத்தின் டிரெயிலரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும் அவர்களது ...