இந்தியா, பிப்ரவரி 28 -- கயல் சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: கயல் சீரியலில், சுப்ரமணியத்தால் தேவி திட்டம் போட்டு கடத்தப்பட்ட நிலையில், இதுகுறித்து எதுவும் அறியாத கயலின் அம்மா காமாட்சி கயலுக்கு போன் செய்து விவரத்தை சொல்கிறாள். இதனால் பதட்டமான கயல், உடனடியாக எழிலுக்கு போன் செய்து நடந்தவற்றை கூறுகிறாள்.

இதற்கிடையில், தேவியை கடத்திச் சென்றவர்களிடம் தேவி தன்னை விட்டுவிடுமாறு மன்றாடி கை எடுத்து கும்பிட்டு கேட்டு கெஞ்சுகிறாள். ஆனால், அங்கிருப்பவர்கள் தேவியை விடுவதாய் இல்லை.

அதற்குள்ளாக, சரவண வேலுவின் சித்தப்பா, டூவீலரில் சென்று கொண்டிருக்கும் சமயத்தில், தேவியை சிலர் கடத்தி கொண்டு செல்வதை பார்த்துள்ளார். இதைப் பார்த்த அடுத்த நொடியே என்ன செய்வது எனத் தெரியாமல், சரவண வேலுவுக்கு போன் செய்கிறான்.

மேலும் படிக்க: தேவியை கொல்ல திட்டம் போடும் விக்னேஷ் மா...