இந்தியா, ஏப்ரல் 16 -- ஓடிடி ட்ரெண்டிங்: பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள ஸ்வீட்ஹார்ட் படத்தில் சார்மிங் ஸ்டார் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை இளங்கோ ராம் இயக்கியுள்ளார். மார்ச் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெறவில்லை. ஆனால், ஓடிடி தளங்களில் ஸ்வீட்ஹார்ட் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் படிக்க| நான் ஏகலைவன்.. அவர் துரோணாச்சாரியார்.. ரஜினியை புகழ்ந்து கூலி படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த நபர்..

ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்வீட்ஹார்ட் படம் ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு பிரிவிலும் முதலிடத்தில் உள்ளது. இந்தப் படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது. தமிழ், தெலுங்...