இந்தியா, ஏப்ரல் 11 -- தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை பற்றி மீண்டும் அவதூறாக பேசியதாகக் கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சில நாட்களாகவே தயாரிப்பாளர் சங்கத்தினருக்கும் ஆர். கே. செல்வமணிக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது .

அந்த அறிக்கையில், " தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக தாய் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட தொழ...