இந்தியா, ஏப்ரல் 20 -- நடிகை ஊர்வசி ரவுத்தேலா, உத்தரகாண்டில் தன் பெயரில் கோயில் இருப்பதாக கூறியதையடுத்து, சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்து வருகின்றனர். சிலர் ஊர்வசி ரவுத்தேலா'கற்பனை' செய்து வருவதாக கூறிய நிலையில், மதத் தலைவர்கள் அவரது கருத்து 'நம்பிக்கையைப் பகடி' செய்வதாகவும் விமர்சித்தனர்.

மேலும் படிக்க| என்னை கடவுளாக வழிபடுகிறார்கள்.. தென்னிந்தியாவிலும் கோவில் வேண்டும்.. சர்ச்சையில் சிக்கிய ஊர்வசி ரவுத்தேலா

இந்நிலையில், நேற்று நடிகை ஊர்வசியின் குழு சார்பாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது, அதில் நடிகை பேசியதை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அந்த அறிக்கையில் "உத்தரகாண்டில் என் பெயரில் ஒரு கோயில் இருக்கிறது என்று தான் ஊர்வசி ரவுத்தேலா கூறினார். அதை ஊர்வசி ரவுத்தேலாவின் கோயில் என்று அவர் கூறவில்லை. இப்போது மக்கள் யாரும் ...