இந்தியா, மார்ச் 8 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 8 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷனின் திருமணத்திற்காக ஜெயலில் இருந்து பரோலில் வந்த ஆதி குணசேகரனை அவருடைய வீட்டில் தங்கக் கூடாது என நீதிமன்றம் கூறியது. இதனால், அறிவுக்கரசி வீட்டில் தங்கி இருந்த ஆதி குணசேகரன் சக்தியை அழைத்து பெண்களிடம் பேசி தன்னை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு கூறினார்.

சக்தியும் அண்ணனின் நிலையைக் கண்டு பரிதாபமடைந்து இத்தனை நாள் பெண்களின் பக்கம் நின்று பேசியவர், அண்ணனிடம் உள்ள நியாயத்தை பேசி வீட்டில் உள்ளோர்களிடம் சண்டை போட்டார். இதன் விளைவு நீதிமன்றத்தில் ஆதி குணசேகரன் வீட்டில் வந்து தங்க தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பெண்கள் தரப்பு கூறினர். இதனால், ஆதி குணசேகரன் அவரது வீட்டில் தங்க விதித்த தடையை நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க: குணசேகர...