இந்தியா, பிப்ரவரி 24 -- எதிர்நீச்சல் சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், இத்தனை நாள் சிறையில் இருந்த ஆதி குணசேகரன் மகனின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வந்துள்ளார். இவரை வரவேற்க கதிரக் வக்கீல்களுடன் கோர்ட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, கதிரை பற்றி பேசிய வக்கீலிடம், தம்பிய பத்தி உங்களுக்கு தெரியாது. வீட்டுக்கு வந்து பாருங்க. முழுசா பாப்பீங்க என பில்டப் கொடுக்கிறார்.

இதற்கிடையில், வீட்டில் உள்ள பெண்கள் எல்லாம் வழக்கம் போல சமையலறையில் அமர்ந்து, இனி என்ன செய்வது என திட்டம் தீட்டி வருகின்றனர். ஆதி குணசேகரன் வருகையால் இனி என்னென்ன நடக்குமோ என பதற்றத்தில் எல்லோரும் ஆளுக்கு ஒரு மூளையில் அமர்ந்து பேசி வருகின்றனர்.

ஏற்கனவே இவங்களோட ஆட்டம் தாங்காது. இப்போ அந்த அறிவுக்கரசி குடும்பமும் இவங்களோட சேர்ந்து இருக்கு. அதுனால ஆ...