இந்தியா, பிப்ரவரி 22 -- உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஒரு ஐட்டம். டிபன் பாக்ஸில் கொடுக்கும் காய்கறிகளை அப்படியே வீட்டுக்கு எடுத்து வரும் குழந்தைகள் கூட உருளைக்கிழங்கு பொரியல் என்றால் காலி செய்து விடுவார்கள். நீங்கள் வீட்டில் செய்யும் உருளைக்கிழங்கு மொறு மொறுன்னு காரசாரமா டேஸ்ட்டாக வர வேண்டுமா.. இந்த முறையில் செய்து பாருங்க.. அப்பறம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உங்களை அடிக்கடி உருளைக்கிழங்கு பொரியல் செய்து தர சொல்லி கேட்பார்கள். சூடான சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் இந்த பொரியல் ஒன்று இருந்தால் போதும் அட்டகாசமா இருக்கும்.

உருளைக்கிழங்கு - 1/4 கிலோ

எண்ணெய் - 4 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

கடுகு உளுந்தம்பருப்பு - 1ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - 10 பல்

வெங்காயம் - 10

கறிவேப்பிலை - 1 கொத்து

மிளகாய் தூ...