இந்தியா, மே 1 -- திரைப்பட நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனது 'எக்ஸ்' சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், தனித்தன்மை மிக்க நடிப்பாற்றலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள திரை ஆளுமை; கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல், ட்ரோன் வடிவமைப்பு என பல துறைகளில் தனது திறமைகளைத் தொடர்ந்து வெளிக்காட்டி, பல சாதனைகளையும் புரிந்து வரும் அன்புச் சகோதரர் "பத்ம பூஷன்" திரு. #அஜித்குமார் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! பல்துறை வித்தகராக அவர் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.
Published by HT Digital Content Services with permission from HT Tamil....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.