இந்தியா, ஏப்ரல் 27 -- பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் இந்த மாதம் (ஏப்ரல், 2025) பல திரைப்படங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளன. வெவ்வேறு ஜானர்களைச் சேர்ந்த படங்கள் தங்கள் வருகையின் மூலம் மக்களை கவர்ந்துள்ளன. அவற்றில் சில சுவாரஸ்யமான படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க| நயன்தாரா கேட்ட சம்பளம்! வாயடைத்துப் போன டோலிவுட்! அப்படி எவ்வளவு கேட்டார் தெரியுமா? தீயாய் பரவும் தகவல்..

சோரி 2 ஏப்ரல் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. திகில் த்ரில்லர் படமான இதில் நுஷ்ரத் பருச்சா மற்றும் சோஹா அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். விஷால் ஃபூரியா இயக்கியுள்ள இந்த படம் தனது மகளை காப்பாற்ற தாயார் எடுக்கும் முயற்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சோரி 2 படத்தில் திகில் கூ...