இந்தியா, ஏப்ரல் 18 -- நாயகன் படத்திற்கு பின் நடிகர் மணிரத்னம்- கமல் ஹாசன் கூட்டணியில் பல ஆண்டுகளுக்குப் பின் உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்தப் படத்தின் ஜிங்குச்சா என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கமல் ஹாசன் எழுதியுள்ள இந்தப் பாடலை வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன், ஆதித்யா ஆர்கே ஆகியோர் பாடியுள்ளனர். கல்யாண கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் படிக்க| வித்தியாச கெட்டப்பில் கமல், சிம்பு.. தக் லைஃப் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. கவுண்டவுன் ஸ்டார்ட்..

இந்த பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கமல் ஹாசன், " நான் இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் இப்போது பேசப் போகிறேன். இது அரசியலுக்காக அல்ல. உயிரே.. உறவே.. தமிழே.. இது தமிழனின் எதார்...