இந்தியா, மே 10 -- இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றமான சூழலில், இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாட்டின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க:- 'இந்தி தெரியாததால் 10,000 கோடி ரூபாய் இழந்தேன்!' ஏர்செல் நிறுவனர் சிவசங்கரன் பரபரப்பு பேட்டி!

காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே தொடங்கிய இப்பேரணி, போர் நினைவு சின்னம் வரை சுமார் 3.4 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது. சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்நிகழ்வில், முன்னாள் ராணுவ வீரர்கள், இந்தோ-பாகிஸ்தான் மற்றும் கார்கில் போரில் பங்கேற்றவர்கள், என்சிசி, என்எஸ்எஸ...