இந்தியா, மே 11 -- நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமணத்திற்கு பாடகி கெனிஷாவுடன் வந்த பஞ்சாயத்தே இன்னும் முடியாமல் இருக்கிறது. இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகளும் வதந்திகளும் வந்த வண்ணம் இருந்த நிலையில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி இதுதொடர்பாக நீண்ட நெடிய விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக பல்வேறு திரைப் பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

மேலும் படிக்க| 'மக்கள் அந்த அளவுக்கு மோசமில்ல.. அவங்க நம்பிக்கைய சாகடிக்க விரும்பல..' லக்கி பாஸ்கர் டைரக்டர் டச்

இந்த நிலையில், ரவி மோகன் மீண்டும் தற்போது தன் தோழி கெனிஷாவுடன் ஐசரி கணேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கும் சேர்ந்து வந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, தற்போது விவாகரத்து அறிவிப்புக்கு பின்...