இந்தியா, ஏப்ரல் 6 -- தமிழில் வாரணம் ஆயிரம், ரோமியோ ஜூலியட், தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ரேயா குப்தோ. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர், சென்னையில் தான் வளர்ந்து வந்தார். இவர் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சிக்கந்தர் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகம் ஆகியுள்ளார்.

மேலும் படிக்க| எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தேவையில்லை.. காஸ்டிங் கவுச் அனுபவத்தை பகிர்ந்த நடிகை ஆர்த்திகா

இவர் தற்போது, சினிமா ஆடிஷன், காஸ்டிங் கவுச் போன்றவற்றால் தான் அனுபவித்த கொடுமைகளை பேட்டி ஒன்றில், வெளிப்படையாக பேசியுள்ளார். சென்னையில் சில வருடங்களுக்கு முன் அவர் எதிர்கொண்ட காஸ்டிங் கவுச் பற்றி கூறுகையில், " நான் 2014ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு என் அம்மாவுடன் சென்றிருந்தேன். அப்போது, நான் ஆடிஷன் ...