இந்தியா, ஏப்ரல் 30 -- அட்சய திருதியை: அட்சய திருதியை அன்று அட்சய பலன் கிடைக்கும் நாள். இந்நாளில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் வாங்குவது பாரம்பரியமாக உள்ளது. அட்சய திருதியான இன்றைய ( ஏப்ரல் 30 ) நாளில், கஜகேசரி யோகம் உருவாவதோடு, மூன்று முக்கிய கிரகங்களின் நிலை மிகவும் நன்றாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த நாள் பல ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தருகிறது.

அட்சய திருதியை நாளில், கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் தனது உயர்ந்த ராசியான மேஷத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் சந்திரனும் தனது மிக உயர்ந்த ராசியான ரிஷபத்தில் அமர்ந்து இருக்கிறார் .

மகிழ்ச்சியின் கிரகமான சுக்கிரன் இன்று அவரது மிக உயர்ந்த ராசியான மீனத்தில் இருக்கிறார். இந்த நாளில், தேவகுரு சந்திரனுடன் இருந்து கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறார். லட்சுமி நாராயண ராஜ யோகம், சர்வார்த்த சித...