இந்தியா, ஏப்ரல் 27 -- கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தான் நடிக்கும் ரெட்ரோ படத்தை விளம்பரப்படுத்த நடிகர் சூர்யா சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தார். இதுதொடர்பாக நேற்று நடந்த நிகழ்ச்சியில், தனது கல்வி தொண்டு நிறுவனமான அகரம் அறக்கட்டளை பற்றியும் பேசினார். அப்போது, ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவி கண் மற்றும் இரத்த வங்கி தன்னை எவ்வாறு சென்னையில் அறக்கட்டளை தொடங்க தூண்டியது என்பதை வெளிப்படுத்தினார்.

மேலும் படிக்க| ஜீரோ கெமிஸ்ட்ரி.. ஜீரோ சப்போர்ட்.. குஷ்புவுக்கும் தனக்குமான காதலை கிண்டலாக சொல்லும் சுந்தர்.சி..

ஹைதராபாத்தில் உள்ள சிரஞ்சீவியின் இரத்த வங்கிக்கு சென்ற பின் தான் எனக்கு ஒரு அறக்கட்டளையைத் தொடங்குவதற்கான விதை மனதிற்குள் முளைத்ததாக சூர்யா நிகழ்ச்சியில் தெரிவித்தார். "இது எல்லாம் இங்குதான் தொடங்கியது, சிரஞ்சீவிகாருவுடனான எனது அனுபவம் ...