இந்தியா, பிப்ரவரி 23 -- ZEE5: ஞாயிற்றுக்கிழமைகளில் அனைவரும் வீட்டில் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பது வழக்கம். அப்படி பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று நீங்கள் குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து வீட்டில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கத் திட்டமிட்டால், ZEE 5-ஓடிடி தளத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட அற்புதமான கதைகளைக் கொண்ட பாலிவுட் திரைப்படங்கள் உள்ளன. அனைவரும் அமர்ந்து பார்க்கக்கூடிய சிறந்த 9 பாலிவுட் திரைப்படங்களின் பட்டியல் குறித்துப் பார்ப்போம்.

அனிருத்தா ராய் சௌத்ரி இயக்கியுள்ள திரில்லர் திரைப்படம், கடக் சிங். இப்படத்தில் அருண் குமார் 'ஏ.கே' ஸ்ரீவஸ்தவா என்னும் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடித்திருக்கிறார். மிகவும் சிக்கலான சிட்-ஃபண்ட் ஊழல் வழக்கை உடைக்க பங்கஜ் திரிபாதி முயற்சிக்கிறார். பங்கஜ் திரிபாதியின் மகளாக சஞ்சனா சங...