இந்தியா, பிப்ரவரி 8 -- Anna Serial: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில், சௌந்தரபாண்டி வரவைத்து இருந்த பெண் வீட்டார், சிவபாலனை வீட்டோட மாப்பிள்ளையாக கேட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சிவபாலன் எனக்கு ஓகே தான் பா... நான் வீட்டோட மாப்பிள்ளையாக போயிடுறேன்.. நீங்க மட்டும் தனியா சந்தோசமா இருங்க என்று சொல்ல, சௌந்தரபாண்டி இனிமே யாராவது வீட்டோட மாப்பிள்ளையாக கேட்டு வந்தீங்க. அவ்வளவு தான் என சத்தம் போடுகிறார்.

இதைத்தொடர்ந்து, திருச்செந்தூரை பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் செட்டிலான ஒரு குடும்பம் ஒன்று கோயிலில் பரிகாரம் செய்வதற்காக திருச்செந்தூர் வருகின்றனர்.

அப்போது கணவனும், ...