இந்தியா, பிப்ரவரி 16 -- Yogi Babu: நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நடிகர் யோகி பாபு காரில் பெங்களூரு சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த யோகி பாபு பயணித்த கார், சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நல்வாய்ப்பாக காயம் இல்லாமல் உயிர் தப்பினார், நடிகர் யோகி பாபு. பின் சிறிது நேரத்தில் வேறு ஒரு கார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்து பெங்களூரு புறப்பட்டுச் சென்றார், யோகி பாபு. இந்த விபத்து காரணமாக வாலாஜாபேட்டை - பெங்களூரு நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Published by ...