இந்தியா, பிப்ரவரி 17 -- இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கான தேரவுப்பருவம் தொடங்கி விட்டது. சிபிஎஸ்சி மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை முதல் தேர்வு தொடங்கியது. மேலும் இனி வரும் நாட்களில் தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு தேர்வுகள் வர இருக்கிறது. தேர்வுக்கு இன்றிலிருந்தே மாணவர்கள் தயாராக தொடங்கி விட்டனர். சில பள்ளிகளில் இதற்கென சிறப்பு வகுப்புகள் வைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்கள் மட்டும் உறுதுணையாக இருந்தால் போதாது. வீட்டில் உள்ள பெற்றோர்களும் துணை நிற்க வேண்டும். அப்போது தான் மனதை ஒருநிலை படுத்தி மாணவர்கள் படிப்பார்கள். எனவே மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் நாட்களில் யோகா செய்தால் படிப்பில் கவனம் செலுத்த உதவும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை...