இந்தியா, பிப்ரவரி 2 -- உலக ஈர நில அல்லது சதுப்பு நில தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 02 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இயற்கையின் கொடையான ஈர நிலம், சதுப்பு நிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலங்கள் நமக்கு பல நன்மைகளை தருகின்றன. அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு புகலிடமாகவும் இவை திகழ்கின்றன.

கடல் அலைகளின் கோரத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் அரணாக இருக்கும் சதுப்பு நிலங்கள் சுனாமி அலைகளை தடுக்கிறது. கடல் நீர் நிலத்தினுள் புகாமல் தடுப்பதுடன், வெள்ள நீரை உள்வாங்கி வெள்ள சேதத்தையும் தடுக்கிறது. இந்த நிலங்களில் வாழும் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் மற்ற நிலப்பகுதியை விட வேறுபட்டு நிற்கும். இது இருவகைப்படும். அவை கடலோர உப்புநீர் சதுப்பு நிலம், இன்னொன்று நன்னீர் சதுப்பு நிலம்

ஈர நிலம் என்னும் சதுப்பு நிலம...