இந்தியா, மார்ச் 20 -- கதைகள் கேட்டும், கூறியும் பழக்கப்பட்டவர்கள் நாம். கதைகள் நமது கற்பனை திறனை விரிவுபடுத்தக்கூடியவை. ஒரு கதையை கூறும்போதோ அல்லது கேட்கும்போதோ அந்த கதாபாத்திரங்களுக்கு நாம் ஒரு உருவம் கொடுப்போம் அல்லது அதில் நமக்கு பிடித்த கதாபாத்திரங்களாகவே கேட்பவர் தங்களை கற்பனை செய்துகொள்ளும் வாய்ப்பு உள்ளது.

ஒரு கதாசிரியரின் திறமை, ஒரு கதையை படிக்கும்போது, அந்தக்கதையுடனே ஒருவர் ஒன்றிவிடுவதில் இருக்கிறது. ஒரு நல்ல கதை என்றால் நாம் அதை பலருக்கு கூறிக்கொண்டே இருப்போம். அதுவும் அந்த கதாசிரியரின் வெற்றி.

உண்மையில் சினிமாவின் துவக்கம் கதை கூறுவது, பின்னர் நாடகமாகி அது சினிமாகியது. இன்னும் கதை கூறும்விதம் எத்தனை வளர்ச்சியடைந்தாலும் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது கதை. இன்று உலக கதை சொல்லும் தினம்.

உலக கதை சொல்லும் தினம், மார்ச் 20ம் தேதி ...