இந்தியா, பிப்ரவரி 13 -- தொழில்நுட்ப துறையில் அபார வளர்ச்சியின் காரணமாக மெய்நிகர் உண்மை (Virtual Reality) வரை நாம் வளர்ச்சியடைந்து விட்டோம். இப்போது இறந்தவர்களை செயற்கை நுண்ணறிவு மூலம் நம் கண் முன்னே கொண்டு வருகிறோம். கடலுக்கு அப்பால் இருக்கும் உறவுகளை கூட எளிதாக முகம் பார்த்து பேச முடிகின்றது. இதற்கு காரணமான தொழில்நுட்ப வளர்ச்சியின் முதன்மை கட்ட வளர்ச்சியின் ஒரு அங்கம் தான் வானொலி. இதன் பயன் இன்று வரை நமக்கு பயன்படுகிறது. இத்தகைய வானொலியின் பயன்பாட்டை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13 அன்று உலக வானொலி தினம் கொண்டாடப்படுகிறது.

பிப்ரவரி 13 என்பது வானொலி ஒலிபரப்பைக் கொண்டாடவும், வானொலி ஒலிபரப்பாளர்களிடையே சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தவும், முடிவெடுப்பவர்கள் சமூக வானொலிகள் உட்பட வானொலி மூலம் தகவல்களை உருவாக்கி அணுகுவதை ஊக்குவிக்க...