இந்தியா, ஏப்ரல் 7 -- இன்று உலக சுகாதார தினம், நல்ல சுகாதாரமான துவக்கம் ஒளிமயமான எதிர்காலம் என்பது அதன் கருப்பொருள் ஆகும். அதாவது பிறப்பது முதல் ஆரோக்கியம் என்பது ஆகும். தமிழகத்தில் பிறக்கும்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து காணலாம்.

இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது

தமிழகத்தில் அண்மை புள்ளிவிவரப்படி, பெண்களின் பேறுகால இறப்பு 39.4 ஆகக் குறைந்துள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 2023 முதல் 2024 மார்ச் வரை ஒரு இறப்பு கூட நிகழவில்லை என்பது முக்கியமான ஒன்று. இந்த பேறுகால இறப்புக்கு, குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் அதிக உதிரப்போக்கு ஆகும்.

முதல் 24 மணி நேரத்தில் ஏற்படும் ரத்தப்போக்கை பிரைமரி போஸ்ட்பார்டம் ஹெமரேஜ் எனவும், 24 மணி நேரம் கழித்த பின்னர் ஏற்படும் உதிரப்போக்கை செகன்டரி ஹெமரேஜ் என்று அழைப்பார்கள். இதுதான் 25...