இந்தியா, ஏப்ரல் 2 -- உலக பாக்ஸிங் கோப்பை 2025 தொடர் பிரேசில் நாட்டிலுள்ள ஃபோஸ் டோ இகுவாசு நகரில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் பல வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆண்கள 50 கிலோ எடைப் பிரிவில் இளம் இந்திய குத்துச்சண்டை வீரர் ஜடுமணி சிங் மண்டெங்பாம் அரையிறுதிக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான நரேந்தர் (90+ கிலோ), ஜுக்னூ (85 கிலோ), மற்றும் நிகில் துபே (75 கிலோ) ஆகிய மூன்று குத்துச்சண்டை வீரர்கள் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர்.

காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து குத்துச்சண்டை வீரர் எல்லிஸ் ட்ரோப்ரிட்ஜை எதிர்த்து விளையாடினார் ஜடுமணி சிங். பரபரப்பான இந்த போட்டியில் 3-2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய வீரர் வெற்றியைப் பெற்றார்.

இந்திய வீரர்களான சச்சின் (60 கிலோ) மற்றும் விஷால் (90 கிலோ) ஆகியோர் ஏ...