இந்தியா, பிப்ரவரி 10 -- இந்தியாவில் பல விதமான உணவு வகைகள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட பகுதிக்கும் ஒரு பிரபல உணவுகள் இருக்கும். இந்த உணவுகளுக்கு பல நாடுகளில் இருந்து பல பிரியர்கள் இருக்கின்றனர். இந்திய உணவு என்றால் விரும்பி சாப்பிடும் வெளிநாட்டவர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக இந்தியா பல வித்தியாசமான உணவு வகைகளைக் கொண்டிருந்தாலும், ஏறத்தாழ ஒரே மாதிரியான சமையல் முறைகளை கொண்டுள்ளது. இந்தியாவின் இனிப்பு உணவு தனிப்பட்ட சுவை கொண்டதாக உள்ளது. தித்திக்கும் வித விதமான இனிப்பு உணவுகள் நம் சுவை அரும்புகளை உணர்ச்சி அதிகமாக்க உதவும். பிரபலமான இனிப்பு உணவுகளில் பாயசமும் ஒன்று தான். பொதுவாக பாயாசம் சேமியா, ரவை அல்லது பருப்பு போன்ற பொருட்களில் இருந்து செய்யப்படுகின்றன. ஆனால் கோதுமை மாவை வைத்து சுவையான பாயாசம் செய்யலாம். இதனை எளிமையாக செய்வத...