இந்தியா, பிப்ரவரி 15 -- இந்திய உணவுகளுக்கு உலக அளவில் பிரபலமான பெயர் உள்ளது. இந்திய உணவுகள் என்றாலே பல வெளிநாட்டவர்கள் மிகவும் ருசித்து சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இந்திய உணவின் தனிப்பட்ட சுவையும் அதன் மணமும் பலரை வசீகரிக்க செய்கிறது என்றே கூறலாம். அதிலும் இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு உணவுகள் என்றால் கூறவே வேண்டாம் அனைவருக்கும் அத்தனை பிரியமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்தியாவில் உணவுகள் அனைத்தும் தனிப்பட்ட சமையல் செய்முறையால் செய்யப்படுகின்றன. இந்த தனித்துவமான செய்முறையே உணவின் சுவை அதிகரிக்க முக்கிய காரணமாகும்.

இந்தியாவில் செய்யப்படும் இனிப்பு வகைகளில் பிரபலமான ஒரு இனிப்பு உணவு என்றால் அது அல்வாதான். அல்வா என்றால் வட இந்தியாவில் ஒருவகை அல்வா எனவும், தென்னிந்தியாவில் ஒரு வகை அல்வா என பல வகைகள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டில் செய்யப்...