இந்தியா, ஏப்ரல் 18 -- தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட அதிகமாக இருந்தது.

வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37deg - 40deg செல்சியஸ், வட தமிழக கடலோரப்பகுதிகள், தென் தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33deg - 37deg செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20deg -30deg செல்சியஸ் பதிவாகியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.4deg செல்சியஸ் மற்றும் சேலத்தில் 39.5deg ...