இந்தியா, மார்ச் 20 -- இன்று முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

24.03.2024 மற்றும் 25.03.2023: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோடை காலம் நெருங்கும் நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் பருவமழை கடந்த ஜனவரி 15ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை பனி மூட்டம் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது....