இந்தியா, ஜனவரி 27 -- 35 வயது முதல் 55 வயதுக்குரிய பருவம் மத்திம வயது எனப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் தனாதிபதி என்று சொல்லப்படும் 2ஆம் அதிபதியும், லாபாதிபதி என்று சொல்லப்படும் 11ஆம் அதிபதியும் இணைந்து 5ஆம் வீட்டில் இருந்து 9ஆம் வீட்டிற்குள் ஏதேனும் ஒரு வீட்டில் வலுவுடன் இருந்தால் மத்திம வயதில் தனம் சேரும் யோகம் உண்டாகும். இவர்களுக்கு மத்திம வயதில் சிறந்த வேலை, சிறந்த தொழில், குழந்தை பிறந்த பிறகு தொடர் வெற்றிகளை அடைதல், பொருளாதர முன்னேற்றம், வசதி வாய்ப்புகள் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

மேஷம் லக்ன ஜாதகத்திற்கு 2க்கு உடைய சுக்கிரன் மற்றும் 11ஆம் இடத்திற்கு உரிய சனி பகவான் 7ஆம் வீட்டில் இணைந்து இருந்தால் மிகச்சிறந்த யோகம் உண்டாக்கும்.

ரிஷபம் லக்னத்திற்கு புதன் மற்றும் குரு இணைந்து 5, 8 ஆகிய வீடுகளில் இருந்தால் மத்திம வயதில் பொருள் ஈட்டலாம்.

மிதுன...