இந்தியா, ஏப்ரல் 3 -- உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பேட்டியால் தர்பூசணி உழவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடைக்காலத்தில் வெப்பத்தின் கடுமையைப் போக்கவும், உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கவும் சாப்பிடப்படும் தர்பூசணி பழங்கள் குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், தர்பூசணி விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க:- Savukku Shankar: 'பணி ஓய்வு பெறும் சங்கர்ஜிவால்! தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்?' சவுக்கு சங்கர் ட்விட்டால் பரபரப்பு!

தர்பூசணி பழங்கள் இயல்பாக இளஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக...