இந்தியா, பிப்ரவரி 9 -- Washing Machine Tips: நாள் முழுவதும் வேலை செய்து சோர்வாக இருக்கும் பெண்களுக்கு வாஷிங் மெஷின் ஒரு சிறந்த வரப்பிரசாதம். வாஷிங் மெஷின் துணிகளை துவைக்க மிகவும் எளிதான மற்றும் வசதியான கருவியாகும். இது துவைப்பது மட்டுமல்லாமல், அவற்றை குறுகிய நேரத்தில் உலர்த்தவும் செய்கிறது. ஆனால் பலர் துணிகளை துவைக்கும் போதும், துவைத்த பிறகும் சில தவறுகளை செய்கிறார்கள். இது சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. துணிகளை துவைக்கும் போது மட்டுமின்றி, வாஷிங் மெஷினில் துணிகளை துவைத்த பிறகும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். அவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருந்தால் சில நோய்த்தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இந்த செய்தித் தொகுப்பில் வாஷின் மெஷினை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பதை...