இந்தியா, ஏப்ரல் 3 -- மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃபு சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த 27-03-2025 அன்று இந்த மாமன்றத்தில் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்தியத் திருநாட்டின் மத நல்லிணக்கத்திற்கும், சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ஆம் ஆண்டின் வக்ஃபு சட்டத்தைத் திருத்துவதற்கு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃபு சட்டத் திருத்த முன்வரைவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற அந்தத் தீர்மானம், பாஜக தவிர அனைத்துக் கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்...