இந்தியா, பிப்ரவரி 9 -- நீங்கள் வால்நட் பிரியர் என்றால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். 100 கிராம் வால்நட்களில் என்ன நன்மைகள் உள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளன. புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இது உங்கள் மூளை, இதயம் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் ஆகியவற்றை வளர்க்கிறது. இதில் உங்கள் உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா 3 மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் குணங்கள் ஆகிய அனைத்தும் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

100 கிராம் வால்நட்டில் 654 கலோரிகள் உள்ளது. இது உங்கள் உடலுக்கு அதிக ஆற்றலைக் கொடுக்கிறது. நாள் முழுவதும் உங்களின் நடவடிக்கைகள், உடற்பயிற்சிகள் மற்றும் வளர்சிதைக...