இந்தியா, மார்ச் 4 -- VTV Movie: கௌதம் மேனன்- சிம்பு- த்ரிஷா கூட்டணியில் மெகாஹிட் அடித்த திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படம், வெளியான நான் தொடங்கி இன்று 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநரான கௌதம் மேனன், ஏன் இந்தப் படத்திற்கு விண்ணைத்தாண்டி வருவாயா என பெயரிட்டார் என்பது குறித்து சோனி மியூசிக் யூடியூபிற்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

மேலும் படிக்க: மக்கள் கொண்டாடும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்.. அப்படி என்ன ஸ்பெஷல் ?

அந்தப் பேட்டியில், "இது என் கதைக்கு ஏத்த மாதிரி டைட்டிலா அமைஞ்சது. முதல்ல இந்த படத்துக்கு நான் ஸ்கிரிப்ட் எழுதுன போது, வெண்ணிலவே வெண்ணிலவேன்னு தான் பேரு வச்சேன். அப்புறம் தான் நான் கொஞ்சம் ரியலைஸ் பண்ணேன் வெண்ணிலவே வெண்ணிலவே பாட்டுல ...