இந்தியா, பிப்ரவரி 14 -- VJ Siddhu: மூணுவேளையும் கறிகஞ்சி போட்டாங்க என ஏஜிஎஸ் நிறுவனத்தை வி.ஜே.சித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

டிராகன் திரைப்படத்தின் பிரி-ரிலீஸ் நிகழ்ச்சியில், வி.ஜே.சித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவர் பேசிய வீடியோ வைரல் ஆகியிருக்கிறது. அதில், ''ரொம்ப ரொம்ப நன்றி முக்கியமா சொல்லணும்னா ரெண்டு பேருக்கு நன்றி சொல்லணும். ஒன்று, ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட். அவங்கதான் வந்து இந்த வாய்ப்பை எனக்கும் ஹர்ஷத்துக்கும் கொடுத்தாங்க. பெரிய நன்றி. இன்னொருத்தர், அஸ்வத் ப்ரோ. அவங்க எனக்கு தெரிஞ்சு ஒரு 20 இன்டர்வியூ கொடுத்தாங்கன்னா அந்த 20 இன்டர்வியூலையும் இதை மறக்காம ரைம்ஸ் மாதிரி சொல்லிட்டாரு. அதாவது, 2 லட்சம் சப்ஸ்கிரைபர் இருக்கும்போதே நான் அவரை நடிக்க கூப்பிட்டேன்னு சொன்னார்.

இன்னும் சொல்லப்போனால் நம்ம சேனல் ஆரம்பிச்சு 11ஆவது சப்ஸ்கிரைபர்...