இந்தியா, பிப்ரவரி 14 -- வைட்டமின் டி சத்துக்கள் என்பது உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டு ஆரோக்கியத்துக்கு மிகவும் தேவையான ஒரு சத்து ஆகும். இதற்கு மட்டுமின்றி பருவகால நோய் தொற்றுகள் ஏற்படாமல் அடித்து விரட்ட உதவுகிறது. இது உங்கள் உடலின் கடும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. எனவே வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுகள் என்ன என்பதைப் பாருங்கள்.

சால்மன், மத்தி மற்றும் கெளுத்தி ஆகிய மீன்களில் அதிகளவில் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளன. இந்த கொழுப்பு அதிகம் நிறைந்த மீன்கள் உங்கள் உடலுக்கும் தேவையான ஆரோக்கிய கொழுப்புக்களைக் கொடுக்கிறது. மேலும் இது உங்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

முட்டை, குறிப்பாக அதில் உள்ள மஞ்சள் கரு, வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த மற்றொரு முக்கியமான ஒன்றாகும். முழு முட்டையையும் நீங்கள் சாப்பிட அது உங்கள் உ...