இந்தியா, பிப்ரவரி 13 -- Vishnu Manchu: தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும், நடிகர் ரஜினிகாந்தின் நீண்ட கால நண்பராகவும் இருப்பவர், நடிகர் மோகன் பாபு. அவரது மகன் விஷ்ணு மஞ்சு. நடிகர், கதையாசிரியர், இயக்குநர், என பல பணிகளைச் செய்யும் நடிகர் விஷ்ணு மஞ்சு, சாய் வித் சித்ரா நிகழ்ச்சிக்காக டூரிங் டாக்கிஸ் யூட்யூப் சேனலில் பேசியிருக்கிறார்.

எனது முதல் படத்துக்கே அப்பாவின் புகழ் உதவியாக இருந்தது சார். எனது அப்பா பட்ட கஷ்டம் நான் படாமல், ஒரு புது நடிகர், சினிமா கேரியரில் பட்ட கஷ்டம்படாமல், எனக்கு மிகப்பெரிய புரொடக்‌ஷன் டீமில் பணியாற்ற வாய்ப்புக் கிடைச்சது. அடுத்து வழக்கம்போல், நமக்கு திறமை இருந்தால் தான், அடுத்த படம் வரும். மேலும் என் அப்பா மாதிரி இவர் நடிப்பாரான்னு என் மீது எதிர்பார்ப்புகள் இருக்கு. அது இப்போது வரைக்கும் இருக்கு...